இந்தியாவின் 58 கோடி இளைஞர்களின் சக்தியை அறிவாற்றல் யுகத்திற்கு
சாதகமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என
மூத்த விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தெரிவித்தார்.
திருநெல்வேலி, ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி செயலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ரஞ்சித்சிங் அறிக்கை வாசித்தார். இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் மூத்த விஞ்ஞானியும் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரியுமான சிவதாணுப்பிள்ளை பங்கேற்று, 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இவர்களில் மூன்று பேர் நெல்லை பல்கலையில் முதலிடத்தையும், 28 பேர் பல்கலை அளவிலான ரேங்குகளையும் பெற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் சிவதாணுப்பிள்ளை பேசுகையில், நான் 1963ல் மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் போது இங்கு பி.யூ.சி. பயின்ற இருவர் என்னுடன் படித்தார்கள். அப்போதே இந்த கல்லூரியின் பெருமையை அறிவேன். ஒரு நாட்டின் பெருமை அதன் அறிவுத்திறன், பொருளாதார மேம்பாடு, படை வலிமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டதாகும். இந்தியா கி.மு. 2 ஆயிரத்து 500 ஆண்டுகளிலேயே விவசாயம், தொழிலில் மேம்பட்டிருந்தது.
அந்நிய படையெடுப்புகளாலும், தொழில்புரட்சியில் பங்கேற்காததாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும் நலிவடைந்துவிட்டோம். இன்னமும் வளரும் நாடாகவே உள்ள இந்தியாவின் தற்போதைய தேவை "முன்னேற்ற தொலைநோக்காகும்". இந்தியாவில் உள்ள 58 கோடி இளைஞர்களின் ஆக்க சக்தியை பயன்படுத்தி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கோடு புதிய பாரதத்தை படைக்க முடியும். இன்றைய அறிவாற்றல் யுகம் இந்தியாவிற்கு சாதகமாகவே உள்ளது என்றார்.
முன்னதாக இந்தியா ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் பணிகள் குறித்து நிருபர்களிடம் கூறுகையில், வளைகுடா போர்களின் போதுதான், இந்தியாவிற்கும் ஏவுகணைகளின் தேவை உணரப்பட்டது. மற்ற துறைகளில் நாம் நான்காம், ஐந்தாம் இடங்களில் இருக்கிறோம். எனவே தூரத்தில் இருக்கும் எதிரிப்படைகளின் இலக்கை தாக்கவல்ல பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பில் தற்போது உலக அளவில் முதலிடத்தில் உள்ளோம். இதற்காக ரஷ்ய நாட்டின் உந்து சக்தியையும், நமது தொழிற்நுட்பங்களையும் பயன்படுத்தி சாதித்துள்ளோம்.