நாடு முழுவதும் 9 லட்சத்து 30,000 வாக்குச்சாவடிகள் : 10 கோடி புதிய வாக்காளர்கள் நாடு முழுவதும் 9 லட்சத்து 30,000 வாக்குச்சாவடிகள் : 10 கோடி புதிய வாக்காளர்கள்


* மக்களவை தேர்தல் ஏப்ரல் 7ம் முதல் மே 12ம் தேதி வரையில் 9 கட்டங்களாக நடைபெறுகிறது. 9 கட்டமாக நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

* நாடு முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன்

பிரதேசங்களில் மொத்தம் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் மட்டும் 80 தொகுதிகள் உள்ளன.

* தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன.

* நடப்பு மக்களவையின் பதவி காலம் ஜூன் 1ம் தேதியுடன் முடிகிறது. புதிய மக்களவை மே 31க்குள் அமைக்கப்படும்.

* மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறும்.

* 2004 தேர்தலில் மொத்தம் 67.10 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 2009 தேர்தலில் 71.40 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

* இந்த தேர்தலில் நாடு முழுவதும் 81.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 10 கோடி பேர் புதிய வாக்காளர்கள்.

* மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு தொகை உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2009ல் ரூ.25 லட்சமாக இருந்தது. 2011ல் ரூ.40 லட்சம் ஆக உயர்த்தப்பட்டது. இந்த தேர்தலில் ரூ.70 லட்சம் வரையில் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* இந்த தேர்தலில் முதல் முறையாக, ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்று குறிப்பிடும் Ôநோட்டாÕ என்ற பட்டன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெற்றுள்ளது.

* நாடு முழுவதும் தேர்தலை அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்தி முடிக்க மொத்தம் 1.1 கோடி தேர்தல் பணி ஊழியர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதில் பாதிப்பேர் பாதுகாப்பு படையினர். மீதி சுமார் 55 லட்சம் சிவில் அலுவலர்கள், ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

* நாடு முழுவதும் 9 லட்சத்து 30,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

* மொத்தம் சுமார் 12 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இதனுடன் பொதுத்துறை நிறுவனங்களிடம் வாங்கப்பட்ட 2.5 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயாராகி வருகின்றன.

* ஆந்திர பிரதேச சட்டசபையின் பதவி காலம் ஜூன் 2ம் தேதியும், ஒடிசா சட்டசபையின் பதவி காலம் ஜூன் 7ம் தேதியும்,  சிக்கிம் சட்டசபையின் பதவி காலம் மே 21ம் தேதியும் முடிகிறது.

* ஆந்திரா, சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடப்பதால், அந்த மாநிலங்களில் இரண்டு வாக்குகள் பதிவு செய்ய இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...