கடந்த பொதுத்தேர்தல்களில் 90 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவான
வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, கள்ள ஓட்டு போடுவதை
தடுக்கும் வகையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.இதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:–
கள்ள ஓட்டு போடுவதை தடுக்க...
பாராளுமன்ற தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதையும், பணபலம் ஆதிக்கம் செலுத்துவதையும் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த பொதுத்தேர்தல்களின் முடிவுகளை ஆய்வு செய்து எந்தெந்த வாக்குச்சாவடிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன? குறிப்பிட்ட ஒரு வேட்பாளர் 75 சதவீதத்துக்கும் அதிகமான ஒட்டுகளை பெற்ற வாக்குச்சாவடிகள் எவை? என்பதை கண்டு அறிந்து, அவற்றை கூடுதல் கண்காணிப்பில் வைக்க வேண்டிய முக்கியமான வாக்குச்சாவடிகளாக கருத வேண்டும்.
கூடுதல் பாதுகாப்பு
அந்த வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் எதுவும் இன்றி வாக்குப்பதிவு நேர்மையாக நடைபெறும் வகையில், அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினரை நிறுத்துவதோடு, கூடுதல் பார்வையாளர்களையும் அனுப்பி வைக்க வேண்டும். பாரபட்சமற்ற முறையில் செயல்படும் தேர்தல் அதிகாரிகளை அந்த வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்க வேண்டும்.அந்த வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டுகள் போடப்படுவதையும், பணபலம் ஆதிக்கம் செலுத்துவதையும் தடுக்க போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.