தமிழகத்திற்கான லோக்சபா தேர்தல் ஏப்ரல் 24ம் தேதி நடக்க உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக
தலைமை தேர்தல் அதிகாரி பிரவீ்ன் குமார் கூறியதாவது: வாக்காளர்கள் பெயர் சேர்க்க வசதியாக, வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், பதிவு செய்யலாம். நீக்கல் மற்றும் மாற்றல் உள்ளிட்டவை செய்ய முடியாது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. அமைச்சர்கள் அதிகாரிகளை சந்திக்க கூடாது. சுழல் விளக்குகளுடன் கார்களில் செல்ல கூடாது. மக்கள், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது. பெரிய தொகைகளை, அதற்குரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்ல கூடாது. இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.