பெற்றோரை கட்டாயம் வாக்களிக்கச் செய்வோம் என்று பள்ளி மாணவிகள் புதன்கிழமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நடக்கவிருக்கும் 16வது நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது பெற்றோரையும், 18 வயதுக்கு மேற்பட்ட சகோதர, சகோதரிகளையும் கண்டிப்பாக வாக்களிக்கச் செய்வோம் என்று சூளை பெண்கள்
மேல்நிலைப் பள்ளி மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வாக்களிப்பது மக்களின் கடமை மற்றும் உரிமை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்நிகழ்ச்சிக்கு சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். மாணவிகளிடம் வழங்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தில் தாங்கள் வாக்களிப்போம் என்று கையொப்பமிட்டதோடு, தங்கள் பெற்றோரிடமும் கையொப்பம் பெறுவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...