யோசிக்கலாம்!!! -ஒரு பள்ளிக் குழந்தையின் கனவு!!!

இன்று இப்போதுள்ள தமிழ்நாட்டு தலைமுறையினருக்கு லாட்டரி சீட்டு என்றால் என்னவென்றே தெரியாத நிலையை மறுக்கமுடியாது.
லாட்டரி டிக்கெட் விற்பனையை தமிழக அரசு தடை செய்தபோது,ஐயோ!!! எத்தனை பேரின் வாழ்வாதாரம்  பாதிக்கிறது!!!.அவ்வளவுதான்,நிறையப்பேர் வாழ்க்கை
கெட்டுவிடும்.வேறு எந்த பிழைப்பிற்கு சென்று பிழைப்பது??? தமிழ்நாட்டு அரசாங்கம் அவ்வளவுதான்,பணம் வருமானமே இருக்காது!!!  என்று கூறிப்  புலம்பியவர்கள் ,அடுத்தபடியாக வேறு பிழைப்புகளை தேடிக்கொண்டு மாற்று வழியில் வருமானம் பார்க்கத் துவங்கி,அத்துவக்கம் வெற்றி அடைந்ததும் நம் அனைவருக்கும் கண்ணால் கண்ட உண்மை. இன்று இப்போதுள்ள தமிழ்நாட்டு தலைமுறையினருக்கு லாட்டரி சீட்டு என்றால் என்னவென்றே தெரியாத நிலையை மறுக்கமுடியாது.
எதற்காக சொல்லவருகிறேன் என்றால்,ஏழை அப்பாவிகள் வருமானம் பாதிக்கப்படும் என்று தெரிந்தும் "லாட்டரிக்கு தடை" என்று அறிவித்த தற்போதைய அரசு,ஏழைகளுக்கும்,அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் அப்பாவி தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் எனத்தெரிந்தும் "மது பான விற்பனைக்கு  தடை " என அறிவிக்க,தயக்கம் காட்டாமல்,தடையை பிறப்பிக்க வேண்டும் என SSTA  பள்ளிக்குழந்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...