கர்நாடகாவில் செயல்படும் வேத பாடசாலைக்கு மின்சாரம், குடிநீர் சப்ளை
துண்டிக்கப்பட்டதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம்
தெரிவித்தது.
கர்நாடக மாநிலம், மல்லீஸ்வரத்தில் உபய வேத பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு, வேதபாராயண வகுப்புகள், சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்த பாடசாலையை ஒட்டி திருமண மண்டபங்களும் உள்ளன. "இந்த பாடசாலையில் வகுப்புகள் நடத்துவதால் ஒலி மாசு ஏற்படுகிறது. அக்கம் பக்கத்தினருக்கு இடையூறு ஏற்படுகிறது" என்று கூறி, அப்பகுதியினர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுகுறித்து ஆய்வு நடத்துமாறு, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வேத பாடசாலையில் ஆய்வு நடத்தினர். மேலும் உரிய முறையில், "நோட்டீஸ்" கொடுக்காமல், பாடசாலைக்கான மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து, பாடசாலை சார்பில், தேசிய பசுமை தீர்ப் பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாடசாலை சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜரானார். வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் சொக்கலிங்கம், உறுப்பினர் நாகேந்திரன் ஆகியோர், "உரிய முறையில் முன்னறிவிப்பு செய்யாமல் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்தது தவறு. இதனால் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, கர்நாடக மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. துண்டிக்கப்பட்ட இணைப்புகளை உடனே கொடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர். வழக்கை, மே மாதம் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.