விதியின் பெயரைச் சொல்லிக் கொண்டு சோம்பிக் கிடக்காமல் விதியை மாற்றும் வல்லமை கொண்டவராய் மாறி இந்த உலகத்தை நம் காலடியில் வீழச் செய்வோம்.

குருகுலமொன்றில் கல்வி பயிலும் ஆர்வத்துடன் ஒரு சிறுவன் வந்து நிற்கின்றான்.
அந்தக் காலத்தில் மாணவனின் அறிவைப்
பார்த்து அவனை பாடசாலையில் சேர்ப்பதில்லை. அவர்களது கைரேகையும் சாமுத்ரிகா இலட்சணத்தையும் பார்த்தே கல்வி பயில அனுமதிக்கப்பட்டனர்.
அதே வழக்கப்படி அங்கிருந்த ஆசிரியரும் அச்சிறுவனின் கைரேகையை ஆராய்ந்தார்.
நன்றாக திருப்பிப் திருப்பி பரிசோதித்த ஆசிரியர் உதட்டைப் பிதுக்கியவாறே 'உன் உள்ளங்கையில் அறிவு ரேகை இல்லை. உனக்கு படிப்பு அறவே வராது. ஆதலால் உன்னை இந்த குருகுலத்தில் சேர்க்க இயலாது" என்றார்.
அதற்கு அச்சிறுவன் 'அய்யா! உள்ளங்கையில் இந்த கல்வி ரேகை எங்கிருந்து எங்கு எப்படி ஓட வேண்டும்' என்றான்.
ஆசிரியரும் அவனுடைய உள்ளங்கையில் படிப்பு ரேகை எப்படி உருவாக வேண்டும் என்று காண்பித்தார்.
உடனே அச்சிறுவன் அருகிலிருந்த கூரிய கத்தியை எடுத்து ஆசிரியர் காட்டியவாறு படிப்பு ரேகையை ஆழமாகக் கீறினான்.
இரத்தம் வழியும் உள்ளங்கையை ஆசிரியர் முகத்திற்கு நேராக நீட்டியவாறு 'இப்போது எனது உள்ளங்கையில் படிப்பு ரேகை உருவாகி விட்டது. எனக்கு கல்வி பயில அனுமதி தாருங்கள்' என்றான்.
அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல...
மெளரிய பேரரசின் அச்சாணியாய் விளங்கிய சாணக்கியன் தான் அந்தச் சிறுவன்.
ஆக, விதியின் பெயரைச் சொல்லிக் கொண்டு சோம்பிக் கிடக்காமல் விதியை மாற்றும் வல்லமை கொண்டவராய் மாறி இந்த உலகத்தை நம் காலடியில் வீழச் செய்வோம்.

விதியை உருவாக்குவோம்...
குருகுலமொன்றில் கல்வி பயிலும் ஆர்வத்துடன் ஒரு சிறுவன்  வந்து நிற்கின்றான்.
அந்தக் காலத்தில் மாணவனின் அறிவைப் பார்த்து அவனை பாடசாலையில் சேர்ப்பதில்லை. அவர்களது கைரேகையும் சாமுத்ரிகா இலட்சணத்தையும் பார்த்தே கல்வி பயில அனுமதிக்கப்பட்டனர்.
அதே வழக்கப்படி அங்கிருந்த ஆசிரியரும் அச்சிறுவனின் கைரேகையை ஆராய்ந்தார்.
நன்றாக திருப்பிப் திருப்பி பரிசோதித்த ஆசிரியர் உதட்டைப் பிதுக்கியவாறே 'உன் உள்ளங்கையில் அறிவு ரேகை இல்லை. உனக்கு படிப்பு அறவே வராது. ஆதலால் உன்னை இந்த குருகுலத்தில் சேர்க்க இயலாது" என்றார்.
அதற்கு அச்சிறுவன் 'அய்யா! உள்ளங்கையில் இந்த கல்வி ரேகை எங்கிருந்து எங்கு எப்படி ஓட வேண்டும்' என்றான்.
ஆசிரியரும் அவனுடைய உள்ளங்கையில் படிப்பு ரேகை எப்படி உருவாக வேண்டும் என்று காண்பித்தார்.
உடனே அச்சிறுவன் அருகிலிருந்த கூரிய கத்தியை எடுத்து ஆசிரியர் காட்டியவாறு படிப்பு ரேகையை ஆழமாகக் கீறினான்.
இரத்தம் வழியும் உள்ளங்கையை ஆசிரியர் முகத்திற்கு நேராக நீட்டியவாறு 'இப்போது எனது உள்ளங்கையில் படிப்பு ரேகை உருவாகி விட்டது. எனக்கு கல்வி பயில அனுமதி தாருங்கள்' என்றான்.
அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல...
மெளரிய பேரரசின் அச்சாணியாய் விளங்கிய சாணக்கியன் தான் அந்தச் சிறுவன்.
ஆக, விதியின் பெயரைச் சொல்லிக் கொண்டு சோம்பிக் கிடக்காமல் விதியை மாற்றும் வல்லமை கொண்டவராய் மாறி இந்த உலகத்தை நம் காலடியில் வீழச் செய்வோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...