பட்டதாரி கலந்தாய்வு சம்பந்தமாக சென்னையில் , இன்று மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் ,பள்ளிக்கல்வி துணைச்செயலாளர்,தொடக்கல்வி இயக்குனர்,ஆகியோரிடம் சந்திப்பு.
நம்முடைய இயக்க மாநில பொறுப்பாளர்கள் இன்று சென்னையில் ,தொடக்கக்கல்வித் துறையில் பட்டதாரி கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நேரில் சந்தித்து SSTA சார்பாக மனு அளித்தனர்.
இச்சந்திப்பு குறித்து SSTA பொதுச்செயலாளர் ராபர்ட் அவர்கள் அளித்த பிரத்தியோகப் பேட்டி:
இன்று நம்முடைய தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம், இடைநிலை ஆசிரியர்களுக்கான பட்டதாரி பதிவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டுமஎனக்கேட்டோம்,இயக்குனர் அவர்கள் பொறுமையுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் நம்மிடம் குறைகளை கேட்டறிந்தார்.தேர்தல் தேதி அறிவிக்காமல் இருந்தால்,இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கலந்தாய்வை நடத்திவிடலாம்,தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் நடைமுறைகள்அமுலுக்கு வந்தாலும்,தேர்தல் முடிந்தபிறகு மே மாதத்தில்,மாவட்ட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பட்டதாரி பதவி உயர்வு கலந்தாய்வையும் கண்டிப்பாக நடத்தி முடிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்.எனவே ,கண்டிப்பாக நல்ல முடிவு சீக்கிரம் உண்டு என நம்பலாம்.
முன்னதாக பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் டில்லி சென்றதால் பள்ளிக்கல்வித்துறை இணைச்செயலாளர் அவர்களை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளோம்.

மேலும் ,நிதித்துறை செயலாளர் அவர்களையும் நேரில் சந்தித்து ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டுமாய் கேட்டுக்கொண்டோம்.கண்டிப்பாக நல்ல ஒரு குறைந்த பட்ச மாற்றம் வரும் என நம்பிக்கை உள்ளது.எனவே ,இடைநிலை ஆசிரியர் சமுதாயம் பெற என்றென்றும் பாடுபடும் ஆசிரியர்களுக்கான SSTA " எனக்கூறினார் 