"ஹெல்மெட்' அணிவது கட்டாயம் : ஐகோர்ட் உத்தரவு


"ஹெல்மெட்' அணிவதை கட்டாயமாக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. "ஹெல்மெட்' அணியாமல் பயணம் செய்தவர்களிடம், இதுவரை 2 கோடியே 89 லட்சத்து 81 ஆயிரத்து 930 ரூபாய்
அபராதம் வசூலித்துள்ளதாக, காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

மதுரை தர்பார்ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக உள்துறை செயலாளர் 2007 பிப்.,22 ல் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில்," மோட்டார் வாகனச் சட்டப்படி, டூவீலர்கள் ஓட்டுவோர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர், விபத்துக்களில் தலைக்காயம் ஏற்படாமல் தடுக்க "ஹெல்மெட்' அணிவது கட்டாயம் என' என உள்ளது. இதை எதிர்த்து, சிலர் தாக்கல் செய்த மனுக்களை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. "ஹெல்மெட்' அணியாமல் டூவீலர்கள் ஓட்டுவதால், விபத்துகளில், தலையில் அடிபட்டு பலர் பலியாகின்றனர். "ஹெல்மெட்' அணிவது கட்டாயம் என்ற அரசு உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் மெல்டியூ ஆஜரானார். மதுரை, திருச்சி போலீஸ் கமிஷனர்கள், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி எஸ்.பி.,கள் பதில் மனு: "ஹெல்மெட்' அவசியத்தை வலியுறுத்தி ஊடகங்கள் மூலமும், பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். "ஹெல்மெட்' அணியாமல் முதல்முறையாக பிடிபடுவோரிடம் 100 ரூபாய், மீண்டும் பிடிபட்டால் 300 ரூபாய் அபராதம் வசூலிக்கிறோம். 2006 லிருந்து 2013 வரை 6 லட்சத்து 62 ஆயிரத்து 874 பேரிடம், 2 கோடியே 89 லட்சத்து 81 ஆயிரத்து 930 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளோம். இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதிகள்: அடிக்கடி வெளியில் பயணம் செய்கிறோம். "டூவீலர்' ஓட்டுவோர் யாரும் "ஹெல்மெட்' அணிந்ததாக தெரியவில்லை. மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் ஐகோர்ட் உத்தரவுப்படி "ஹெல்மெட்' கட்டாயம் என்பதை, அனைத்து போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,களும் அமல்படுத்த வேண்டும். இதை, தங்களுக்கு கீழ் பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு, கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஏப்.,1 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...