ஆசிரியர்கள் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டிய தகவல் இது, நமக்கு கண்டிப்பாக இத்தகவல் தேவை.
புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன், ஆசிரிய சொந்தங்களே
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘நோட்டா ஓட்டு’ போடுவது எப்படி?
தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் இனிமேல் தேர்தலை புறக்கணிக்கவோ, வாக்குச்சாவடிக்கு வருவதை தவிர்க்கவோ தேவையில்லை. வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்வதற்கான வாய்ப்பை கடந்த தேர்தல்களிலேயே தேர்தல் ஆணையம் வழங்கியது.
ஆனால், 49(0) எனும் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால், வாக்களிக்காதவர் வெளிப்படையாக தெரியவும், அதனால் சம்மந்தப்பட்டவரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியும் ஏற்பட்டது.
எனவே, இந்த தேர்தலில் வாக்களிக்க விரும்பாத வாக்காளர் ரகசிய முறையில், தனது பதிவை வெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி பட்டன் ‘நோட்டா’ ஆகும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (பேலட் யூனிட்) மொத்தம் 16 வேட்பாளர்களின் சின்னங்கள் இடம்பெறும் வசதியுள்ளது. அதில், போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு அடுத்ததாக உள்ள பட்டன் ‘நோட்டா’ என ஒதுக்கப்படுகிறது.
உதாரணமாக, 9 வேட்பாளர்கள் போட்டியிட்டால், 10வது பட்டன் நோட்டா. 15 வேட்பாளர்கள் போட்டியிட்டால் 16வது பட்டன் நோட்டா. 15க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் இறங்கினால், கூடுதலாக ஒரு பேலட் யூனிட் பொருத்தப்படும்.
யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் பதிவு செய்வதற்காக ஒதுக்கப்படும் பட்டனுக்கு எதிரில் யாருக்கும் வாக்களிக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருக்கும். ‘நோட்டா’ எனும் புதிய வாய்ப்பு குறித்து, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. எனவே, இந்த தேர்தலில் ‘நோட்டா ஓட்டு’ அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது