ஓய்வூதியதாரர்கள் கவனத்துக்கு...

ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் கணக்கு குறித்த விவரங்களை வரும் மார்ச் 10-ஆம் தேதிக்குள் கல்லூரி சாலையில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து சென்னை-6 இல் செயல்பட்டு வரும் ஓய்வூதிய அலுவலர் கே.டி.குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள ஓய்வூதிய அலுவலக மாதிரித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஓய்வூதிய ஆணை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலுடன் அலுவலகத்துக்கு மார்ச் 10-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும். நேரில் ஆஜராக முடியாதவர்கள் இந்த விவரங்களை ஸ்கேன் செய்து பிடிஎஃப் முறையில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம். மேற்கூறிய ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான ஓய்வூதியத்தை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க இயலாது. மேலும் விவரங்களுக்கு: தொலைபேசி: 044-2820 3500, 2820 3600, 2827 9239 மின்னஞ்சல்: ppochn.tndt@nic.in

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...