புதிதாக அளிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் மின்தடை
குறித்து புகார் அளிக்க முடியவில்லை என நுகர்வோர் மத்தியில்
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர், தங்கள் குடியிருப்பு பகுதியில் மின்தடை, குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்டவை ஏற்பட்டால் அது குறித்து மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு 155333 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளித்து வந்தனர்.
இந்த நிலையில் மின்தடை குறித்த புகார்களுக்கு 1912 என்ற எண் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த எண்ணை தொடர்பு கொண்டால், நீங்கள் டயல் செய்ய எண் முழுமை அடையவில்லை என பதில் வருகிறது.
இதனால் மின்தடை குறித்த புகார்களை, குறிப்பாக இரவு நேரத்தில் திடீரென ஏற்படும் மின்தடை குறித்து புகார் அளிக்க முடியவில்லை என சென்னைவாசிகள் மத்தியில் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, தங்கள் வாடிக்கையாளர்கள், மின்தடை புகாருக்காக நடைமுறையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ள அனைத்து தனியார் செல்போன் சேவை நிறுவனங்களும் ஆவன செய்ய வேண்டும். இது குறித்து பி.எஸ்.என்.எல். மூலம் அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.