அதிக செலவாகும் நகரங்கள் பட்டியலில் இம்முறை சிங்கப்பூருக்கு முதலிடம்

உலக அளவில் இந்தாண்டு எடுக்கப்பட்ட

சர்வேயில், அதிக செலவாகும்
நகரங்கள் பட்டியலில்


இம்முறை சிங்கப்பூருக்கு முதலிடம்
கிடைத்துள்ளது . மேலும் இதில் ,
மும்பை,
டெல்லி போன்றவை ரொம்பவே மலிவான
நகரங்கள் என வழக்கம் போல்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

அதே சமயம்
கடந்தாண்டு மிக காஸ்ட்லியான
நகரம் ஆஸ்லோ என்றும் , டெல்லி ,
மும்பை ஆகியவை வாழ்வதற்கு மலிவான
நகரங்கள்
என்று அறிவிக்கப்பட்டிருந்தது நினைவு கூறத்தக்கது .
பொருளாதார நிபுணர்
புலனாய்வு பிரிவு என்ற சர்வதேச
ஆராய்ச்சி நிறுவனம்
ஒவ்வொரு ஆண்டும் உலகின் அதிக
செலவு மிக்க நகரங்கள் குறித்த
சர்வேயை எடுத்து வருகிறது.

சமீபத்தில் இந்நிறுவனம் , உலக
நாடுகளில் முக்கியமான 140
நகரங்களில் சர்வே மேற்கொண்டது .
இதில் , அந்தந்த நகரங்களில்
விற்பனையாகும் முக்கியமான 160
பொருட்களின் விலை ,
சேவை மற்றும்
வெளிநாடு செல்லும்
ஊழியர்களுக்கு தரப்படும்
பயணப்படி உள்ளிட்ட
அம்சங்களை அடிப்படையாக
கொண்டு சர்வே நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
அதன்படி , உலகிலேயே அதிகமான
செலவு மிக்க நகரமாக சிங்கப்பூர்
தேர்வு செய்யப்பட்டிருக்கிறது .

அங்கு கார்களின்
விலை தாறுமாறாக
ஏறி வருகிறது. இதுதவிர ,
வீட்டு வாடகை , நிலத்தின் மதிப்பு,
பொருட்களின் விலை ,
ஷோரூம்களில் விற்கப்படும்
ஐரோப்பிய ஆடைகளின்
விலைகளும்
உச்சகட்டத்தை எட்டி வருகிறதாம்.
மின்சாரம் , குடிநீர் போன்ற
அத்தியாவசிய தேவைகளை கூட
பிற நாடுகளை நம்பியே சிங்கப்பூர்
இருப்பதால் அவற்றின் விலையும்
அதிகளவில் உள்ளது .

ஒட்டுமொத்த
போக்குவரத்து செலவு என்பது நியூயார்க்
நகரத்தை காட்டிலும் சிங்கப்பூரில் 3
மடங்கு அதிகம் என்கின்றன
ஆய்வு முடிவுகள் . இதற்கு ஏற்றார்
போல் தனிநபர் வருமானமும்
உயர்ந்து வருகிறது.
அங்கு ஒரு தொழிலாளி ஒரு பர்கர்
வாங்க 13 நிமிடங்கள்
வேலை பார்த்தால் போதும் .

ஒரு ஐபோன் வாங்க 22 மணி நேரம்
வேலை பார்த்தால் போதும் .
ஆனால், பிலிப்பைன்சின்
மணிலாவில் இதை விட 20
மடங்கு அதிகமாக
வேலை பார்த்தால்தான் ,
அவற்றை வாங்க முடியும்
சிங்கப்பூரில் தனிநபரின்
சராசரி மாத வருமானமே இந்திய
மதிப்பில் ரூ . 30
லட்சத்தை தாண்டுகிறது.
இதனால்தான் கடந்த சர்வேயின்
போது 6வது இடத்தில் இருந்த
சிங்கப்பூர்
தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது .

மேலும் ஜப்பானின் யென்
மதிப்பு குறைந்து வருவதால்,
அந்நாட்டின் தலைநகரான
டோக்கியோ முதலிடத்திலிருந்து 6 வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது .
இதில் 2வது இடத்தில் பாரிஸ் ,
3வது இடத்தில் ஓஸ்லோ,
4வது இடத்தில் ஜூரிச்,
5வது இடத்தில் சிட்னி ஆகிய
நகரங்கள் இடம் பிடித்துள்ளன .

இந்தியாவின் வர்த்தக நகரமான
மும்பை, தலைநகர்
டெல்லி போன்றவை எல்லாம்
சர்வதேச நாடுகளை பார்க்கும்
போது ரொம்பவே செலவு குறைவான
நகரங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...