"புதுமையான சிந்தனைகளை வெளிப்படுத்த கல்வித் திறமையை பயன்படுத்த வேண்டும்"

"கல்வித் திறமையை புகுத்துவதன் மூலம், புதுமையான சிந்தனைகளை வெளிக்கொணர வேண்டும்" என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி மைய உறுப்பினர் செயலர் கே.பி.ஐசக் பேசினார்.

திண்டுக்கல் பி.எஸ். என்.ஏ., பொறியியல் கல்லூரியில், 26 வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சக்திவேல் வரவேற்றார். இயக்குனர்கள் லட்சுமணபிரபு, சுகுமாறன் தலைமை வகித்தனர். இளநிலை பட்டதாரிகள் 702 பேருக்கு, கே.பி.ஐசக், பட்டங்களை வழங்கினார்.
அவர் பேசுகையில், "பட்டங்களை பெறுவதுடன், கல்வியை நிறுத்தி விடக்கூடாது. துறை சார்ந்த தொடர் ஆர்வம் தேவை. புதுமையான சிந்தனைகளை புகுத்துவதில் முயற்சி தேவை. புதுமையான கண்டுபிடிப்புகளே, உலகத்தின் தற்போதைய தேவையாக உள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு, குடிநீர் பிரச்னையை எதிர்நோக்கி உள்ளோம். கல்வியைக் கொண்டு திறமைகளை புகுத்துவதன் மூலம், புதுமையான சிந்தனைகளை வெளிக்கொணர வேண்டும்" என்றார்.
புனே விப்ரோ டெக்னாலஜிஸ் குளோபல் தலைமையாளர் ராஜிவ்சிங்குமார், 332 முதுநிலை பட்டதாரிகளுக்கு, பட்டங்களை வழங்கினார். இளங்கலை பிரிவில், ஐ.டி., பிரிவு மாணவி வித்யாவும், முதுகலை பிரிவில் எம்.சி.ஏ., பிரிவு மாணவி ரோகினியும் பல்கலை அளவில் முதலிடம் பெற்றனர். இக்கல்லூரி மாணவர்கள் 157 பேர், அண்ணா பல்கலை அளவில் தரவரிசை பெற்றுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...