தமிழனுக்கு எங்கு சென்றாலும் இதே நிலைதானா???????


ஹரியானா மாநிலத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒன்று பஞ்ச்குலாவில் உள்ள மகேஷ்பூர் தமிழ் காலனி.


3 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள், சுமார் 40 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் இருந்து தமிழர்களை வெளியேற்ற, மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவிற்கு சாலைப் பணியாளர்களாக வந்த தமிழர்கள் குடியேறிய இந்த இடம்தான் பஞ்ச்குலாவில் உள்ள மகேஷ்பூர் தமிழ் காலனி.

இங்கு அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும், இருப்பதற்கு ஒரு இடம் கிடைத்ததே என்ற எண்ணத்தில் இப்பகுதி மக்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பூபீந்தர் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசு, தமிழர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இன்றும் சாலைப் பணியாளர்களாகவே இருக்கும் தமிழர்களை மகேஷ்பூர் காலனியில் இருந்து வெளியேற்ற மாநில அரசு பல்வேறு நெருக்கடிகளைத் தருவதாகவும் அங்குள்ள மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்

சுமார் 40 ஆண்டுகளாக தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக கூறும் மகேஷ்பூர் தமிழ் காலனி மக்கள், கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் கட்சிகே தேர்தலில் வாக்களிப்போம் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஹரியானா மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில், மகேஷ்பூர் தமிழ் காலனி மக்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதில், தமிழர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்த போதிலும், அதனை நிறைவேற்ற மாநில காங்கிரஸ் அரசு தயக்கம் காட்டி வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...