கல்வியியல் பல்கலை உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு, ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.தமிழகத்தில் செயல்படும், கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும், அந்தந்த பகுதி பல்கலைகளின் கீழ் இருந்தன. கடந்த, சில
ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்பட்டது.இந்த பல்கலையில், தற்போது வரை, துணைவேந்தரே, கல்வி, ஆட்சிமன்றம் மற்றும் நிதிக்குழுவின் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், அப்பல்கலையின், கல்விக்குழுவிற்கான உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உள்ளார்.இதன்படி, ஆசிரியர் தொழில் அறிவியல் துறை பேராசிரியர் கணேசன், மதிப்பு கல்வித் துறை பேராசிரியர் சவுந்தர்ராஜன், கல்வி உளவியல் துறை பேராசிரியர் கோவிந்தன், கல்வி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன், பாடத்திட்ட திட்டமிடல் மற்றும் மதிப்பிடல் துறை பேராசிரியர் பாலகிஷ்ணன் ஆகியோர், நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவர்கள், ஐவரும், மூன்றாண்டுகளுக்கு, இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.

Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...