டீ, காபி குடித்தால் தங்கக்காசு பரிசு : சேலத்தில் டீக்கடை உரிமையாளர் அறிவிப்பு

'சேலம் பிள்ளையார் நகரில், உள்ள கடை முன், 'டீ மற்றும் காபி வாங்குவோருக்கு தங்கக்காசு இலவசம்' என்று விளம்பர போர்டு
வைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம் குறித்து, விநாயகா காபி பார் உரிமையாளர் செந்தில்குமார் கூறியதாவது:நான், 15 ஆண்டாக டீ கடையை நடத்தி வருகிறேன். இதுவரை, டீக்கடைக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. இருந்தாலும், இப்போது எங்கு பார்த்தாலும் டீக்கடைகள் திறக்கப்படுகின்றன. இதனால், வாடிக்கையாளர்களை இழக்கக்கூடாது என்பதற்காகவும், புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் உருவானது தான், 'டீ மற்றும் காபி வாங்கும் அனைவருக்கும், ஒரு கிராம் தங்கக்காசு இலவசம்' என்ற அறிவிப்பு.

தினமும் காலை, 9 மணிக்கு ஒருவருக்கு, 20 லிட்டர் மினரல் வாட்டர் கேன், குலுக்கல் மூலம் இலவசமாக வழங்கி வருகிறோம். கடந்த இரண்டு மாதமாக, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. டீ அல்லது காபியுடன், 25 ரூபாய்க்கு என்ன வாங்கினாலும், அவர்களுக்கு ஒரு டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கனை சேகரித்து, மூன்று மாதத்துக்கு, ஒரு முறை குலுக்கல் நடத்தி, ஒரு கிராம் தங்கக்காசு வழங்கப்படுகிறது. ஏப்ரல், 30ம் தேதி ஒரு கிராம் தங்கக்காசுக்கான முதல் குலுக்கல் நடக்கிறது. உலகத்திலேயே, நாங்கள் தான் முதல் முறையாக, டீக்கடையில் தங்கக்காசு பரிசாக வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...