ஐந்து முதல் ஏழு வயது சிறார்களின் புரியும் திறனை காக்கைகள் கொண்டுள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

மெல்போர்ன்: ஐந்து முதல் ஏழு வயது சிறார்களின் புரியும் திறனை காக்கைகள் கொண்டுள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காக்கைகளின் புரியும் திறன் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். சாதாரண உறவுகளை குழந்தைகள் அறிந்து கொள்வது போல் சைகைகளின் மூலம் பறவைகள் அறிந்து கொள்கின்றனவா என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, ஆறு அண்டங்காக்கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கதைகளில் வருவது போன்று, பானையின் அடியில் இருக்கும் தண்ணீரை குடிப்பதற்கு, சிறு கற்களைப் போடுவது போன்று, இந்த காக்கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்மரக் குச்சிகள் பயிற்சியில், சிறிய கண்ணாடி பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரை, கல், மரக்குச்சிகள் மற்றும் பிற பொருட்களைப் போட்டு, தண்ணீரின் அளவை உயர்த்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆறு சோதனைகளில், அனைத்து காக்கைகளும் வெற்றி பெறவில்லை.
இந்த ஆய்வுகளில், காக்கைகளின் புரிந்து கொள்ளும் திறன், ஐந்து முதல் ஏழு வயதுள்ள சிறார்களின் திறனை ஒத்திருந்தது. பயிற்சி அளிக்கப்பட்ட விதிமுறைகளில் இருந்து, சிறிது மாறினாலும், காக்கைகளால் அவற்றின் இலக்கை நிறைவு செய்ய இயலவில்லை. இவ்வாறு, விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...