மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து, ஏழாவது சம்பள
கமிஷனுக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், 50
லட்சம்,
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள், இன்னும், ஓராண்டிற்குள் மாற்றியமைக்க, கமிஷன் பரிந்துரை செய்யும். மத்திய அரசு ஊழியர்கள், அனைத்திந்திய பணியில் உள்ள அதிகாரிகள், யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் ஊழியர்கள், இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின் உறுப்பினர்கள், சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ராணுவத்தின் அனைத்து படைப்பிரிவில் பணியாற்றும் வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரின் சம்பளம், குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிஅமைக்கப்படுகிறது. இதற்காக, மத்திய சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையின் அடிப்படையில், சம்பளங்கள் மாற்றப்படுகின்றன. அந்த வகையில், ஏழாவது சம்பள கமிஷனை, பிரதமர், மன்மோகன் சிங், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் அமைத்தார். சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி, அசோக்குமார் மாத்தூர் தலைமையிலான அந்த கமிஷன், அமைக்கப்பட்ட நாளிலிருந்து, 18 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும். அதற்கான ஒப்புதலை, நேற்றைய, மத்திய அமைச்சரவை வழங்கியது. அதில், சம்பள கமிஷன் செயல்பட வேண்டியது கட்டாயமே என, வலியுறுத்தப்பட்டது.