மாணவர்கள் பெற்றோரை மதிக்க வேண்டும்: நீதிபதி அறிவுரை

மாணவர்கள், பெற்றோரை மதிக்க வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை வழங்கினார்.

திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியின், 34வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி முதல்வர் முனிரத்தினம் தலைமையில் நேற்று நடந்தது.இதில், சிறப்பு விருந்தினராக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கலந்து கொண்டு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, 252 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:
இங்கு பட்டம் பெற்ற மாணவர்கள், படிப்பை நிறுத்தாமல், மேற்படிப்பு படிக்க வேண்டும். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் தொடர்ந்து படித்து முன்னேற வேண்டும்.அதே நேரத்தில் மாணவர்கள் தங்களது பெற்றோரை மதித்து நடக்க வேண்டும். அவர்கள் கூறும் அறிவுரை ஏற்று நடந்தால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர முடியும்.
பெற்றோரை முதுமை காலத்தில் பாதுகாக்க வேண்டும். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் இலக்கை எளிதில் எட்டலாம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், திருத்தணி நீதிபதி தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...