லோக்சபா தேர்தல் தேதி நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. 15வது லோக்சபா
முடிவடைவதையொட்டி விரைவில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் 6 அல்லது 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதனால் லோக்சபா தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் நாளை லோக்சபா தேர்தல் தேதி குறித்த அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. காலை 10.30 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.