தமிழ்,ஆங்கிலம்,கணக்கு...எல்லாப் பாடமும் டேப்லட்டில் !நாளுக்கு நாள் மாறும் உலகுக்கு ஏற்ப நம்மைப்
புதுப்பித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த வகையில், திருச்சி ஆல்ஃபா குழுமப் பள்ளிகளில், தமிழகத்திலேயே முதன் முதலாக டேப்லட் மூலமாகக் கல்வி கற்கும் 'ஐசோன்’ என்ற முறை தொடங்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யாவும் இயக்குநர் லிங்குசாமியும் கலந்துகொண்டனர். பள்ளியின் தாளாளர் பழனி பேசுகையில், ''உலகத்தில் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்றவாறு நாமும் மாற வேண்டும். அப்போதுதான் கல்வியில் சிறந்து விளங்க முடியும். இந்த ஐசோன் திட்டம் மூலமாக டேப்லட்டில் மென் பொருள் மூலம் எல்லாப் பாடங்களும் பதிவு செய்யப் படும், அதில் இருந்தே நாம் அனைத்துப் பாடங்களையும் எளிதில் படித்திடலாம்'' என்றார். நடிகர் சூர்யா பேசுகையில், ''என் அப்பா, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களைப் பரிசளித்துப் பாராட்டுவார். 2005-ல் ஒரு பழங்குடி மாணவன் பரிசு வாங்கிவிட்டு, 'இந்தப் பரிசை எனது தோழிகளுக்குக் கொடுக்கலாமா?