நானோடெக்னாலஜி துறையில் சாதிக்க கருத்துகள்

நானோடெக்னாலஜி துறை இந்தியாவில் வளர்ந்து வரும் துறையாக உள்ளது. மருத்துவம் முதல் வேளாண்மை வரை பல்வேறு துறைகளில் பணிவாய்ப்புகளை அளிக்கும் துறையாக


இத்துறை திகழ்கிறது. கடந்த 1990ம் ஆண்டில் நானோடெக்னாலஜி ஒரு தனித்துறையாக பரிணாமம் பெற்றது. 2000ம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கம் இத்துறைக்கான முயற்சியை தொடங்கியது. இதன்மூலம் இத்துறை பெரிய அளவில் வளர்ச்சி பெறுவதற்கான வழி ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளிலும் இத்துறை சார்ந்த ஆய்வுகள் மேம்பட தொடங்கின. தற்காலங்களில் இத்துறையின் மீது ஆர்வம் அதிகரித்து பலரும் நானோடெக்னாலஜி துறையை தேர்ந்தெடுக்க படிக்க தொடங்கி உள்ளனர்.

படிப்பில் சேரும் தகுதி:

மேல்நிலைப்பள்ளி படிப்பில் இயற்பியல், கணிதம், மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களை படித்திருந்தால், நானோடெக்னாலஜி பட்டப்படிப்பில் சேர முடியும். பி.டெக்.,நானோடெக்னாலஜி படிப்பில் சேர பள்ளிப்படிப்பில் கணிதத்தை அவசியம் படித்திருக்க வேண்டும்.மேலும், பள்ளிப்படிப்பில் வேதியியல் படித்தவர்கள் இத்துறையில் பி.எஸ.சி., படிப்பிலும் சேரலாம்.

அறிவியல் பிரிவில் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்த பிறகு ஐ.ஐ.டி மும்பையில் பி.டெக்., நானோடெக்னாலஜி படிப்பை மேற்கொள்ள விரும்பினால், அவர் ஜேஇஇ தேர்வை எழுத வேண்டும். இந்த 2 வருட இரட்டை பட்ட படிப்பு ( பி.டெக்., மற்றும் எம்.டெக்.,) இத்துறையில் நிபுணத்துவம் பெற்று பணிபுரிய உதவுகிறது.

மாணவர் சேர்க்கை:


அமைட்டி பல்கலை மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலை போன்றவை 4 ஆண்டு பி.டெக்.,படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கென நானோடெக்னாலஜி மையங்களை வைத்துள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அறிவியல் பாடங்களில் எடுத்த கூட்டு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, அந்தந்த கல்வி நிறுவனங்களின் விதிமுறைகளின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். நானோடெக்னாலஜியில் இளநிலைப் படிப்பை மேற்கொள்ள, இந்தியா முழுவதும் பல கல்லூரிகளும், பல்கலைகளும் உள்ளன. ஐ.ஐ.டி.,கள், அமைட்டி பல்கலை, எஸ்.ஆர்.எம்., பல்கலை,லவ்லி புரபஷனல் பல்கலை போன்றவை அவற்றுள் முக்கியமானவை.

பாடத்திட்டம்:

இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளின் கருத்தாக்கங்களின் அடிப்படையில் இப்படிப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. ஆற்றல், சுகாதாரம், சுற்றுச்சூழல், சென்சார் ஆகிய பல துறைகளில் ஸ்பெஷலைசேஷன்கள் பரந்துள்ளன.

எனவே, இவற்றை தெளிவாக புரிந்து கொள்ள, நல்ல சிறப்பு பயிற்சி பெற்ற நிபுணருடைய வழிகாட்டுதலின் கீழ் உபகரணப் பயிற்சிகளைப் பெற வேண்டும். ஐ.ஐ.டி., மும்பையில் வழங்கப்படும் இத்துறை படிப்பு தொழில்துறையுடன் நெருக்கமாக செயல்படுகிறது. இதன்மூலம் நானோடெக்னாலஜி ஆராய்ச்சி மேம்படுத்தப்பட்டு வணிகமயமாக்கப்படும்.

பல கல்வி நிறுவனங்கள்,மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் பொறியியல் துறைகளில் பி.எஸ்.சி., மற்றும் பி.டெக்., படிப்புகளை வழங்குகின்றன. இந்த படிப்புகள் நானோடெக்னாலஜி கருத்தாக்கங்களை ஒரு இன்டர்டிசிபிலனரி அறிவியலாக கற்பிக்கின்றன.

முதுநிலைப் படிப்பு:

நானோசயின்ஸ் பிரிவில் எம்.எஸ்.சி படிப்பை மேற்கொள்வதை விட, எம்.டெக்., பட்ப்பை மேற்கொள்வதே சிறந்தது. ஏனெனில், இப்படிப்பில் தான் பெல்லோஷிப் அல்லது உதவித்தொகை போன்ற சலுகைகள் கிடைக்கும். இந்தியாவில் 15 கல்லூரிகள் மட்டுமே இத்துறையில் படிப்புகளை வழங்குகின்றன. பெங்களூரில் உள்ள மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையம், இப்படிப்பை மேற்கொள்வதற்கான ஒரு சிறந்த இடமாகும். இக்கல்வி நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிகிறார்கள்.

நல்ல திறன் வாய்ந்த மாணவர்கள் இங்கே ஒருங்கிணைந்த எம்.எஸ், பி.எச்.டி., படிப்பில் சேரலாம். ஆரம்ப நிலையில் ஒவ்வொரு மாணவரும் குறைந்த பட்சம் மாதம் ரூ.8000 உதவித்தொகையாகப் பெறுகிறார். இந்த தொகை காலப்போக்கில் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

சில என்.ஐ.டி.,கள் வழங்கும் இத்துறையின் எம்.டெக்., படிப்புகள் சிறப்பானவை. இதில் சேர ஒருவர் கேட்/ சிஎஸ்ஐஆர்/ஜேஆர்எப் ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேறியிருக்க வேண்டும். என்.ஐ.டி.,களில் ஐ.ஐ.டி., களைப் போன்ற வசதிகள் இருக்காது. இருந்தாலும் சிறந்த ஆசிரியர்கள் இருப்பார்கள். என்.ஐ.டி.,யில் படிப்பை முடித்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஐ.ஐ.டி.,களில் பிஎச்டி., படிப்பில் சேரலாம்.

அம்ரிதா, சாஸ்த்ரா, அமைட்டி போன்ற தனியார் பல்கலைகள், இப்படிப்பிற்கான நல்ல வசதிகளை வழங்குகின்றன. ஆனால் செலவு மிகவும் அதிகம். இந்த கூடுதல் செலவை, புராஜக்ட் மற்றும் ரிசர்ச் அசோசியேட் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் சம்பாதித்து ஈடு செய்யலாம். ஆனால், இந்த தகுதி நிலைகள், பிஎச்.டி., படிப்புகளுக்கு மட்டுமே கிடைக்க கூடியவை.

ஆராய்ச்சி:

இத்துறையில் இளநிலைப்படிப்பை முடித்த பின்னர், முதுநிலை மற்றும் டாக்டோரல் படிப்புகளில் சேரும் போது, பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி., மும்பை சி.ஆர்.என்.டி.எஸ் & ஐ.ஐ.டி., மும்பை ரூர்கி, பாபா ஆட்டோமிக் ஆராய்ச்சி மையம் போன்ற மையங்களில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

பணி வாய்ப்புகள்:

மருத்துவம் தொடங்கி வேளாண்மை வரை, பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன. நானோ தொழில்நுட்பமானது, தற்போது இருக்கும் அம்சங்களுக்கு தூய்மையான மற்றும் பசுமையான மாற்றுகளை தருகிறது. நானோ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில், தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இத்துறையில் படிப்பை முடித்தவர்கள் விஞ்ஞானிகள் அல்லது செயல் மேலாளர்களாக பணியில் சேர தகுதி படைத்தவர்கள். அதே சமயம், ஒரு நிபுணத்துவ நிலையிலான பணி வாய்ப்புகளை பெற வேண்டுமானால், இத்துறையில் ஸ்பெஷலைஸ்டு அறிவை பெற்றிருக்க வேண்டும்.

நானோமெட்டீரியஸ், நானோஎலெக்ட்ரானிக்ஸ் மற்றும் நானோபயோடெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் அதிகளவில் நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். அதிலும், முதல் 2 பிரிவுகளில் மிக அதிகளவு பணி வாய்ப்புகள் உண்டு. இந்த துறைகள், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், ஏரோஸ்பேஸ், நுகர்வோர் பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோட்டிங் மற்றும் இணைப்புகளை 100 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர்கள் மதிப்பில் உற்பத்தி செய்கின்றன. எனவே, மெட்டீரியல் அறிவியல் பிரிவில் எம்.டெக்., அல்லது பிஎச்.டி., ஆகிய படிப்புகளை முடித்தவர்களுக்கு மிகச் சிறப்பான பணி வாய்ப்புகள் உள்ளன.

நானோடெக்னாலஜியை பொறுத்த வரை நானோமெடிசின், நான்&இன்வைஸ் சர்ஜரி, சட்ரல்ஸ் சர்ஜிகல் அப்ளிகேஷன்ஸ், டார்கெட்டேடு சர்பேஸ் மெடிக்கல் அப்ளிகேசுன்ஸ் அண்ட் நானோபிராப்ஸ், ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுள்ளன. சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றுதல், ஒரு மருந்தை ஆபத்து நிறைந்த ஒரு செல்லாக மாற்றுதல், பயோசிப் வடிவத்தில் சென்சார்களை உருவாக்கவதில் இருந்து, ரசாயன கேடயமாக பயன்படும் வகையில் கார்மென்டுகளை உற்பத்தி செய்தல் வரையில் இத்துறையில் பலவிதமான சாத்திய கூறுகள் உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...