மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு கூட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அடுத்த கல்வி ஆண்டுக்கான, பள்ளி செல்லா குழந்தை மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கண்டறிதல் மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் கூட்டம் ராசிபுரம் வட்டார வளமையத்தில் நடந்தது. மேற்பார்வையாளர் சங்கீதா (பொ) வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் மாங்கனி, கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறன் காண்ட, ஐந்து முதல், 18 வயது வரை உள்ள, குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரம்ப கல்வி பதிவேடு ஒவ்வொரு மாதமும் புதுப்பித்தல் வேண்டும். அதில், கல்வி கற்றுள்ளோர், கல்லாதோர், இடைநின்ற மாணவர், கட்டுமானப் பணி, செங்கல் சூளை, அரிசி ஆலை, தவிட்டு ஆலை, கல்குவாரி, மணல் குவாரி, தொழில்சாலைகள், ஜவுளி கடை உள்ளிட்ட இடங்களில் பணிபுரிவது குறித்து கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட்டார வளமைய நிர்வாகிகள் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...