நர்ஸ் பணி: மறுஆய்வு மனு தள்ளுபடி

 கடந்த, 2012, ஜனவரியில், சுகாதாரத் துறை, பிறப்பித்த அரசாணையில், 'அரசு மருத்துவமனைகளில், நர்ஸ் பணியிடங்களில், அரசு மற்றும் அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளில் படித்தவர்களை, தேர்வு மூலம் நிரப்பிக் கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இதை
எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை ஏற்று, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தாக்கலான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் அகர்வால், சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்', 'தமிழக அரசின் ஆணை செல்லும்' எனக் கூறியது. இதை மறு ஆய்வு செய்யக் கோரி, தாக்கல் செய்த மனுவை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்', மறு ஆய்வுக்கு, மனு தகுதியில்லாததால், தள்ளுபடி செய்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...