புகையிலை எந்த அளவுக்கு உடலுக்கு தீங்கானதோ அதே போல சர்க்கரையும்

புகையிலை எந்த அளவுக்கு உடலுக்கு தீங்கானதோ அதே போல சர்க்கரையும் அளவுக்கு மீறினால் நஞ்சாகி விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

உலகம் முழுவதும் சர்க்கரை வியாதி காரணமாக பல சிசுக்கள் பிறப்பதற்கு முன்பே இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. லண்டனைச் சேர்ந்த இதயவியல் நிபுணர் கிரஹாம் மெக்கிரேகர் கூறுகையில், ”தேவையில்லாமல் சரக்கரையை சேர்த்துக் கொள்வது அபாயகரமானது. டைப் 2 சர்க்கரை வியாதி, உடல் பருமன், பல் சீரழிவு ஆகியவற்றை இது ஏற்படுத்தும்.பல காலமாக சர்க்கரையை அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்தபடி உள்ளன. இருப்பினும் இதில் ஆய்வுகள் போதுமானதாக இல்லை” என்றார்.

இதற்கிடையே, சர்க்கரை அளவை உணவுகளில் குறைக்கும் நடவடிக்கைகளும் இங்கிலாந்தில் எடுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கலோரி அளவு அதிகம் உள்ள குளிர்பானங்களுக்குக் கூடுதல் வரி விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் 2050ம் ஆண்டு வாக்கில், உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 50 பில்லியன் பவுண்டுகள் வரை பொருளாதார பாதிப்பும் ஏற்படுமாம். பிராசஸ்ட் உணவுகள், யோகர்ட், மியூசலி, சாஸ், ஜூஸ் போன்றவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். புகையிலையால் உருவாகும் அனைத்து நோய்களும் சர்க்கரை அளவு அதிகரித்தால் வரும் என்றும் எச்சரிக்கின்றனர்.

கோக், பெப்சி போன்றவற்றை குழந்தைகள் கண்ணில் காட்டவே கூடாது என்றும் எச்சரிக்கிறார்கள். மேலும் குழந்தைளுக்கு ஒரு நாளைக்கு 6 ஸ்பூனுக்குக் குறைவாகவே சர்க்கரை தர வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...