தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24ம் தேதி காலை 6 மணி வரை
144  தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியுள்ளார்.
இன்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த பிரவீண் குமார், வாக்காளர்கள் அனைவரும் பணம் வாங்காமல் மனசாட்சியுடன்  தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும்.
ஆதார், பாஸ்போர்ட் உள்பட 12 அடையாள அட்டைகளை காண்பித்து வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்கலாம்.
தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படுகிறதா என்ற திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24ம் தேதி காலை 6 மணி வரை 144  தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது  என்று கூறினார்.
அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதையும், வன்முறை சம்பவங்களை தடுக்கவும் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக பிரவீண் குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தலுக்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...