ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல்
இருந்தவர்களுக்கும் தற்போது அகவிலைப்படி 200 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு ஊதியக்குழு
அமைக்கப்பட்டது. 6வது ஊதியக்குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில்,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலருக்கு உயர்த்தப்பட்ட ஊதியம்,
அகவிலைப்படி அளிக்கப்படுகிறது.
ஊதியக்குழு
பரிந்துரைத்தாலும், பணி இடை நீக்கம், ஒழுங்கு நடவடிக்கை, சொந்த பிரச்னை
போன்ற பல்வேறு காரணங்களால் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதை பெற முடியவில்லை.
எனவே அவர்கள் அனைவருமே 2006ம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் மற்றும்
அகவிலைப்படியைத்தான் பெறலாம்.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அகவிலைப்படி
உயர்த்தி கடந்த 3ம் தேதி அறிவிக்கப்பட்டது, 6வது ஊதியக்குழுவின்
பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு
பொருந்தியது. 2006ம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் பெறுபவர்களுக்கு, கடந்த 3ம்
தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்ட அகவிலைப்படி உயர்வை பெற
முடியாத நிலையில் இருந்தனர். அவர்களின் அகவிலைப்படி 183 சதவீதம் என்ற
அளவிலேயே தொடர்ந்து நீடித்தபடி இருந்தது.