உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஆ.எம்.லோத்தா இம்மாதம் 27-ம் தேதி பொறுப்பேற்கிறார்

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஆ.எம்.லோத்தா இம்மாதம் 27-ம் தேதி பொறுப்பேற்கிறார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோத்தா | கோப்புப் படம்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, நீதிபதி ஆ.எம்.லோத்தாவை ஜனாதிபதி நியமித்துள்ளதாக சட்ட அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு பின், மூத்த நீதிபதியாக திகழ்பவர் லோத்தா (64). இவர், வருகின்ற செப்டம்பர் மாதம் 27-ம் தேதி ஓய்வு பெறும் வரை, ஐந்து மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார்.
நீதிபதி லோத்தாவை உச்ச நீதிமன்ற தலைமையை நீதிபதியாக நியமிக்க, தற்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் பரிந்துரை செய்துள்ளார்.
ஜோத்பூரில் பிறந்த நீதிபதி லோத்தா, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மற்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு வகித்தவர். பின்னர், 2008-ம் ஆண்டு மே 13-ல் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அதன்பின், டிசம்பர் 17, 2008-ல் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருகிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...