பிளஸ் 2: தேர்வு முடிவுகளை அறிய இணையதள முகவரிகள் அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் இணையதள முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது
.
தமிழகத்தில் மார்ச் 3-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 8.78 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. தேர்வர்கள் தங்களது பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்: www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in.
இவற்றில் www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரி ஸ்மார்ட் போன் மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள்: மாணவர்கள் எஸ்.எம்.எஸ். மூலமும் தேர்வு முடிவுகளை மே 9-ஆம் தேதி காலை 10 மணி முதல் அறிந்து கொள்ளலாம். அதற்காக 09282232585 என்ற எண்ணுக்கு கீழ்க்கண்டவாறு எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.
TNBOARD spaceRegister NoDOB in DDMMYYYY என்ற அடிப்படையில் எஸ்.எம்.எஸ். செய்யலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்: ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...