தேர்வு எழுத அனுமதி மறுப்பு: 2 மாணவர்கள் விஷமருந்தி மருத்துவமனையில் அனுமதி

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வருகை பதிவேடு குறைவாக இருந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுத்ததால்,
பொறியியல் புல மாணவர்கள் இருவர் விஷமருந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிதம்பரம் அருகே வல்லம்படுகையைச் சேர்ந்த சங்கர் மகன் அன்பரசன் (20) பிஇ சிவில் அன்ட் ஸ்டெரெக்சரல் இரண்டாமாண்டு பயிலுகிறார். நெய்வேலையைச் சேர்ந்த மற்றொரு மாணவர் ஆனந்தராஜ் (20) பல்கலைக்கழக காவேரி விடுதியில் தங்கி பிஇ சிவில் அன்ட் ஸ்டெரெக்சரல் மூன்றாம் ஆண்டு பயிலுகிறார். தேர்வு எழுத 75 சதவீத வருகை பதிவேடு இருக்க வேண்டும். ஆனால் இந்த இருமாணவர்களும் 54 சதவீதம்தான் வருகை பதிவேடு இருந்ததால், தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த இருவரும் விஷம் அருந்தினர். உடனடியாக அம்மாணவர்கள், சக மாணவர்களால் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...