பென்ஷனுக்கு 2 மாத தீர்வு

பென்ஷன் தொடர்பான புகார்களுக்கு இரண்டு மாதத்தில் தீர்வு காண வேண்டும்' என, அனைத்து அமைச்சகங்களுக்கும், மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் வி.நாராயணசாமி தலைமையிலான மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பென்ஷன் தொடர்பான புகார்களுக்கு விரைவில் தீர்வு காணப்படுவது இல்லை என, பரவலாக புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பென்ஷன் தொடர்பாக, எந்த ஒரு புகார் தெரிவிக்கப்பட்டாலும், இரண்டு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும். புகார்களுக்கு உடனடியாக பதில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் இடைக்கால பதில் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...