மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு
வந்த நாள் முதல் பல்வேறு பிரிவுகளின் கீழ்
இதுவரை 3 ஆயிரத்து 793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
மொத்தம் 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் பெறப்பட்டு, அவற்றில் 3 ஆயிரத்து 793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தேதி கடந்த மார்ச் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்தன. குறிப்பாக, அரசு கட்டடங்கள், அனுமதியின்றி தனியார் சுவர்களில் செய்யப்பட்டிருந்த விளம்பரங்களை அழிப்பதற்கு 3 நாள்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தன. அதன் பிறகும், சுவர்களில் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் இருந்தால் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன.
மேலும், மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக தீவிர தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சியினர் மேற்கொண்டனர். அப்போது, அனுமதியில்லாமல் வாகனங்கள், ஒலி பெருக்கிகளை பயன்படுத்தியது, சட்ட விரோதமாக கூட்டங்களை நடத்தியது என புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றைக் கண்காணிக்க ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் ஒரு பொது பார்வையாளர் நியமிக்கப்பட்டிருந்தார். பார்வையாளர்கள் சார்பிலும் தேர்தல் ஆணையத்திடம் சில புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
எத்தனை வழக்குகள் பதிவு? அரசு கட்டடங்கள் மற்றும் தனியாரிடம் அனுமதி பெறாமல் விளம்பரங்களைச் செய்தது தொடர்பாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் பெறப்பட்டன. அவற்றில் 2 ஆயிரத்து 904 புகார்கள் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசாரம் மற்றும் தொகுதிகளுக்குள் செல்லும் போது வாகனங்களை உரிய அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தியதாக 262 வழக்குகளும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதில் விதிகளை மீறிய குற்றம் தொடர்பாக 20 வழக்குகளும் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர்களைக் கவரும் செயல்கள்: சட்ட விரோதமாக அனுமதி பெறாமல் கூட்டங்களை நடத்தியது மற்றும் அந்தக் கூட்டத்தில் விதிகளை மீறி முரணாகப் பேசியது ஆகியன குறித்து 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பணப் பட்டுவாடாவை தடுப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்ததாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஒரு வேட்பாளருக்குச் சாதகமாக வாக்களிக்கும்படி, வாக்காளர்களைத் தூண்டுவது, அதற்காக அவருக்கு அன்பளிப்புகளை வழங்குவது ஆகியன தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விடுமுறை விடாத தொழில் நிறுவனங்கள் மீதான வழக்கு உள்பட இதர வழக்குகளாக 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 3 ஆயிரத்து 793 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் பிரவீண்குமார் தெரிவித்தார்.
"நீதிமன்றம் மூலம் நடவடிக்கை'
தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் இனி நீதிமன்றங்களின் மூலம் தீர்க்கப்படும் என்று அந்தத் துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர். எந்தெந்த புகார்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கான அபராதம் அல்லது சிறைத் தண்டனையை அதனை விசாரிக்கும் நீதிபதியே அளிப்பார் என தேர்தல் துறை அதிகாரிகள் கூறினர்.
நடத்தை நெறிமுறைகள் முடிவடைவதற்கு முன்பாகவே, தமிழகத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும்படி மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயரதிகாரிகளுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது