தமிழகத்தில்,
1967ல் பதிவான, 76.59 சதவீத ஓட்டுக்கு அடுத்தபடியாக, தற்போது நடந்த
லோக்சபா தேர்தலில் தான், அதிக
ஓட்டுப்பதிவு நடந்து உள்ளது.அதிக அளவில் பெண்கள்
தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், இம்மாதம், 24ம் தேதி தேர்தல் நடந்தது. 73.67 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஆண்களை விட, பெண்கள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். ஓட்டு போட்டவர்களில், ஆண்கள், 73.49; பெண்கள், 73.85; திருநங்கைகள், 12.72 சதவீதம்.
அதிகபட்சமாக, தர்மபுரியில், 81.07 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக தென்சென்னை தொகுதியில், 60.40 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
ஆண்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டு போட்ட தொகுதிகளில், தர்மபுரி முதலிடம் பெற்றுள்ளது. இங்கு, 83.53 சதவீத ஆண்கள் ஓட்டு போட்டுள்ளனர். பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டு போட்ட தொகுதி சிதம்பரம். இங்கு, 81.91 சதவீத பெண்கள் ஓட்டு போட்டு உள்ளனர்.
திருநங்கைகள் பங்களிப்பு
சென்னையில் உள்ள, மூன்று தொகுதிகளின் ஒட்டுமொத்த ஓட்டு சதவீதம், 61.83. இதில், ஆண்கள் பங்களிப்பு, 63.59 சதவீதம்; பெண்கள் பங்களிப்பு, 60.09 சதவீதம். திருநங்கைகள் பங்களிப்பு, 2.29 சதவீதம்.
மயிலாடுதுறை தொகுதியில், ஓட்டுரிமை பெற்ற ஒரு திருநங்கையும் ஓட்டளித்துள்ளார். இதனால், இங்கு திருநங்கைகள் பங்களிப்பு, 100 சதவீதம்.
அதிகபட்சம்
தமிழகத்தில், 1952ல் இருந்து நடந்து வரும் லோக்சபா தேர்தலில், அதிகபட்சமாக, 1967ல், 76.59 சதவீத ஓட்டுகள் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக, இந்த தேர்தலில், 73.67 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இரண்டு லட்சம் தபால் ஓட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எத்தனை ஓட்டுகள் பதிவாகின என்பது, ஓட்டு எண்ணிக்கை நாளான மே, 16ம் தேதி தான் தெரியும். அவற்றை சேர்க்கும் போது, ஓட்டுப்பதிவு, அரை சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த, 2009 லோக்சபா தேர்தலைவிட, இம்முறை தென்சென்னை, மத்திய சென்னை, திருவண்ணாமலை, கோவை, பொள்ளாச்சி, கரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர் தொகுதிகளில் மட்டுமே, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்து உள்ளது.
1.02 கோடி ஓட்டு அதிகரிப்பு
கடந்த, 2009 லோக்சபா தேர்தலை விட, இந்த தேர்தலில் கூடுதலாக, 1.02 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். இதுவரை நடந்த தேர்தலிலேயே, இம்முறை, அதிக வாக்காளர்கள் ஓட்டளித்து உள்ளனர்.
பதிவான ஓட்டுகள்
ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும், பதிவான ஓட்டுகள் விவரம்:
ஆண்டு சதவீதம்
1952 57.89
1957 47.71
1962 68.77
1967 76.59
1971 71.83
1977 67.14
1980 66.76
1984 73.09
1989 66.87
1991 63.92
1996 66.94
1998 57.95
1999 57.98
2004 60.81
2009 72.98
2014 73.67