தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர்
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர்
சம்பத் நிருபர்களிடம் பேசினார். பண பட்டுவாடா குறித்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: ஓட்டுச்சாவடிகளில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கும். இந்த முறை 11 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் யாரும் ஒரு தலைப்பட்சமாக செயல்படக்கூடாது. தேர்தல் விதி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிகளை காரணம் காட்டி, மின்சாரம், குடிநீர் சப்ளை பாதிக்க கூடாது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 17 ஆயிரத்து 684 ஓட்டுச்சாவடிகள் காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுக்கு பணம் பட்டுவாடா தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.