வாக்களிக்கத் தகுதியானவர்கள் 81.46 கோடி பேர்

நாடு முழுவதும் இந்த மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மொத்தம் 81,45,91,184 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள்
என்று தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, இந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நிலவரப்படி உள்ள மொத்த வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய கையேட்டை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தில்லியில் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் எஸ்சி பிரிவினருக்கு 79 தொகுதிகளும், எஸ்டி பிரிவினருக்கு 41 தொகுதிகளும் தனித் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 81,45,91,184 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் 42,66,51,513 பேர் (52.40%), பெண்கள் 38,79,11,330 பேர் (47.60%), மற்றவர்கள் 28,341 பேர் (0.018%) உள்ளனர்.
தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 5,37,52,682 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் ஆண்கள் 2,68,93,009 பேர், பெண்கள் 2,68,56,677 பேர், மற்றவர்கள் 2,996 பேர் உள்ளனர். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8,85,458 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 4,24,958 பேர், பெண்கள் 4,60,488 பேர், மற்றவர்கள் 12 பேர் உள்ளனர்.
ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள பட்டியலில் புதுச்சேரி (52%) முன்னிலை வகிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக கேரளம் (51.9%) உள்ளது.
மொத்த வாக்காளர்களில் 18-19 வயதுக்குள்பட்ட, முதல்முறை வாக்களிக்கவிருக்கும் இளைய தலைமுறையினர் 2.8 சதவீதம் பேராகும்.
நாடு முழுவதும் 2,31,61,296 வாக்காளர்களும், தமிழகத்தில் 11,99,309 வாக்காளர்களும் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.
2009 தேர்தலுடன் ஒப்பிடுகையில், தற்போது 9.76 கோடி வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
இத் தேர்தலில் அதிக வாக்காளர்கள் கொண்ட மாநிலங்களில், 13,43,51,297 வாக்காளர்களுடன் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த 5 மாநிலங்களும் சேர்ந்து மொத்தமுள்ள வாக்காளர்களில் 49 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
3,62,326 வாக்காளர்களுடன் மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மாநிலமாக சிக்கிம் திகழ்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...