பொதுத்தேர்வுகள் முடிந்தன: தேர்ச்சி 90% தாண்டும்

பள்ளி பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்கி 20ம் தேதி வரை 66 மையங்களில் நடக்க உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்வு மிகவும் எளிதாக இருந்ததால் இரு தேர்வுகளிலும், தேர்ச்சி 90 சதவீதத்தை தாண்டும் என கல்வித்துறை எதிர்பார்க்கிறது.
கடந்த இரு ஆண்டுகளாக, தேர்ச்சி சதவீதம் கணிசமாக எகிறி வருகிறது. 2012ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி 86.2 சதவீதமாக இருந்தது; இது 2013ல் 89 சதவீதமாக உயர்ந்தது. பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 2012ல் 86.7 சதவீதமாகவும், 2013ல் 88.01 சதவீதமாகவும் உயர்ந்தது. பிளஸ் 2 தேர்வை விட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...