லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைவதால், இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பு பணியை வேட்பாளர்கள்
தீவிரப்படுத்தி உள்ளனர்.
புதுச்சேரி லோக்சபா தொகுதி தேர்தலில் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஓட்டுப் பதிவு, வரும் 24ம் தேதி காலை 7.00 மணி முதல், மாலை 6.00 மணி வரை நடக்கிறது.
தொகுதியில் மொத்தம் 9 லட்சத்து ஆயிரத்து 357 வாக்காளர்கள், தங்களுடைய ஓட்டுகளைப் பதிவு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
பிரசாரம் இன்று ஓய்கிறது
தேர்தல் ஆணையத் தின் உத்தரவுப்படி, இன்று (22ம் தேதி) மாலை 6.00 மணியுடன் வேட்பாளர்களின் அனைத்து வகை தேர்தல் பிரசார பணிகளும் முடிவடைகிறது.
அதன்பிறகு, வேட்பா ளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம், ஊர்வ லம் நடத்தக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மின்னணு சாதனங்கள் மூலம் பிரசாரம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரிக்கப் பட்டுள்ளது.
பாவம் 'குடி'மகன்கள்
தேர்தலையொட்டி மது கடைகள் இன்று இரவுடன் மூடப்படுகின்றன. ஓட்டுப் பதிவு நாளான வரும் 24ம் தேதி நள்ளிரவு வரை மூன்று நாட்களுக்கு மது கடைகள், பார்கள் திறக்கப்பட மாட்டாது.
எனவே, கோடை வெயிலை சமாளிக்கும் வகையில், தாக சாந்திக்காக சரக்குகளை முன்கூட்டியே வாங்கி 'ஸ்டாக்' வைக்கும் வேலையில் குடிமகன்கள் இறங்கியுள்ளனர்.
இறுதி கட்டம்
லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைவதால், வேட்பாளர்கள் தங்களது இறுதிகட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்களின் பிரசாரம் ஓய்ந்ததையடுத்து, ஊர் ஊராக பைக்கில் பேரணியாக சென்று ஆதரவு திரட்டுவதில் வேட்பாளர்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.
பிரசாரம் நிறைவின்போது இறுதி கட்டத்தில், வாக்காளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.
ஆறுமுனை போட்டி
புதுச்சேரியில் இதுவரை 13 லோக்சபா தேர் தல் நடந்துள்ளது. இதில் காங்., கட்சி 10 முறை வெற்றி பெற்றுள்ளது.
அ.தி.மு.க.,- தி.மு.க.,- பா.ம.க., ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தல்களில் இரு முனை அல்லது மும்முனை போட்டியையே புதுச்சேரி சந்தித்து வந்துள்ளது.
தற்போது நடக்க உள்ள 14வது லோக்சபா தேர்தலில் முதன் முறையாக ஆறு முனை போட்டி ஏற்பட்டுள்ளதால், சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
பிரதான கட்சிகள் அனைத்தும் தனித்தனியே போட்டியிடுவதால், கட்சிகளின் உண்மையான செல்வாக்கு, ஓட்டு வங்கி விபரங்கள் வெளிச்சத்திற்கு வர உள்ளது.
இதனால், புதுச்சேரி அரசியல் கட்சிகள், தொண்டர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பும், பொதுமக்களிடையே ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.
கரன்சி கொடுத்தா கால் பண்ணுங்க
தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை யடுத்து, இன்று முதல் கரன்சிகளை அள்ளி வீச, அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதற்கு கடிவாளமிடும் வகையில், தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்படும் வகையில், தேர்தல் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
பணம் பட்டுவாடா அல்லது ஓட்டுக்கு பணம் தருவதாக தெரிந்தால், 1950 இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.