கிறித்தவ ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.


வருகிற புனித வெள்ளி கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய நாளாகும். நாற்பது நாட்களாக விரதம் இருந்து
புனித வெள்ளி அன்று கோவிலுக்கு சென்று விடிய விடிய பிராத்தனையில் ஈடுபடுகின்றனர். அடுத்த நாளான சனிக்கிழமையும் அன்று இரவும் ஒரு முக்கியமான நாளாகும். ஆனால் ஆசிரியர்களை எப்போதும் வஞ்சிக்கும் அரசு 19.4.14 (பெரிய சனிக்கிழமை) அன்று பள்ளிக்க்கல்வியில் விடைத்தாள் திருத்தும் பணி யும் தொடக்கக்கல்வித்துறை வேலை நாளாகவும் பள்ளி நடைபெறும் என்று தெரிவித்து உள்ளது. இதுவரை ஒரு நாள் கூட பெரிய சனிக்கிழமை அன்று பள்ளியோ, தேர்வோ , விடைத்தாள் திருத்தும் பணியோ நடைபெற்றது இல்லை. ஆனால் இந்த வருடம் பெரிய சனிக்கிழமை அன்று விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறித்தவ ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...