தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் மின் தடை அமல்

தேர்தல் நாளில், தடையில்லா மின்சாரம் வழங்கிய நிலையில், தேர்தல் முடிந்த கையோடு, மீண்டும் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில், கடந்த ஆறு ஆண்டுகளாக, மின் பற்றாக்குறை நிலவுகிறது; இதை சமாளிக்க, மின் தடை செய்யப்படுகிறது. தற்போது, கோடை காலத்திற்கு முன்னதாக, மின் தேவை அதிகரித்துள்ளது. அணைகள் வறண்டு கிடப்பதால், நீர் மின் நிலையங்களில், மின் உற்பத்தி செய்ய முடியவில்லை. மேட்டூர் மற்றும் வட சென்னை விரிவாக்க புதிய அனல் மின் நிலையங்களில், அடிக்கடி பழுது ஏற்படுவதாலும், மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. காற்றாலை மூலமாகவும், எதிர்பார்த்த அளவிற்கு மின்சாரம் உற்பத்தி ஆகவில்லை. எனவே, சென்னை உட்பட பல இடங்களில், மின் தடை செய்யப்பட்டு வந்தது. இதனால், லோக்சபா தேர்தல் நாளின் போதும், மின் தடை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்று, அலுவலகம், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், மின் தேவை, 10,810 மெகா வாட்டாக இருந்தது. மின் உற்பத்தி, இதே அளவிற்கு இருந்ததால், மின் தடை செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்று வழக்கம் போல், அரசு, தனியார் நிறுவனங்கள் இயங்கின. இதனால், மின் தேவை, 12,340 மெகாவாட்டாக அதிகரித்தது; மின் உற்பத்தி, 11,860 மெகாவாட் ஆனது; 480 மெகாவாட், பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், தேர்தல் முடிந்த கையோடு, சென்னை தவிர்த்து, மற்ற இடங்களில், மீண்டும் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் தேவை குறைவாக இருக்கும் என, கருதி, சில மின் நிலையங்களில், மின் உற்பத்தி குறைக்கப்பட்டது. ஆனால், விடுமுறைக்கு பின், ஒரே நேரத்தில், தொழிற்சாலைகள் உட்பட, பல நிறுவனங்கள் இயங்கியதால், மின் தேவை அதிகரித்தது' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...