புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை மாணவனுக்கு நடந்த மனித உரிமை
மீறலை கண்டித்து மாணவர்கள் தொடர்
போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகள் விடுதியில் நள்ளிரவில் மர்ம நபர் திரிவதாக கூறி, மாணவிகள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் துறையின் முதலாமாண்டு மாணவர் ஒருவரை பிடித்து, பல்கலைக்கழக செக்யூரிட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக தனி அறையில் வைத்து அடித்து உதைத்துள்ளனர்.
அந்த மாணவனை மிரட்டி கையெழுத்து வாங்கியதுடன், அந்த மாணவனை, மாணவிகள் விடுதிக்கு கோலத்தில் அழைத்துச் சென்று அடையாள அணிவகுப்பு நடத்தி உள்ளனர். இதனை பல மாணவர்கள் மொபைல் போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவன் தற்கொலைக்கு முயன்றார். இதனையறிந்த சக மாணவர்கள், நேற்று போராட்டம் நடத்தினர். பல்கலை அதிகாரிகள் மாணவர்களை சமாதானப்படுத்தினர்.
மாணவர்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட மாணவன், மாணவிகள் ஹாஸ்டலில் நுழைந்ததாக கூறும் நேரத்தில் அந்த மாணவன் நூலகத்தில் இருந்ததற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. மாணவனை மிரட்டி ஹாஸ்டலில் நுழைந்ததாக கையெழுத்து வாங்கியுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிப்போம் என்றனர்.