அரசு விளம்பரங்களுக்கு வழிகாட்டுதல் முறை உருவாக்கக் குழு

விளம்பரம் என்ற பெயரில் அரசின் நிதி தவறாக பயன்படுத்துவதை  தடுக்கும் வகையில், அரசு விளம்பரங்களுக்கு
வழிகாட்டுதல் நெறி முறையை உருவாக்க குழு அமைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
அரசு விளம்பரம் குறித்து தொடரப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய நீதித்துறை அகாடமியின் முன்னாள் இயக்குநர் மாதவ் மேனன் தலைமையில் குழு அமைக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
விளம்பரம் என்ற பெயரில், அரசின் நலத் திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்துச் சொல்வதாக, கட்சிகள் விளம்பரம் தேடிக் கொள்வதை தடுக்கும் வகையிலும், அரசின் நலத் திட்டங்கள் குறித்த விளம்பரங்களுக்காக அரசின் நிதி தவறாகப் பயன்படுத்துவதை தடுத்து, அரசின் விளம்பரம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நெறிமுறைப்படுத்தும் வகையில் இந்த குழு செயல்படும் என்று கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...