கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகை யில், அனைத்து துணை மின்
நிலையங்கள் மற்றும்
டிரான்ஸ் பார்மர்களை பழுதுபார்த்து வைக் கவும், மின்தடை
நீக்கும் பிரிவில் 24 மணி நேரமும் தொழில் நுட்ப பணியாளர்களை
வைத்திருக்கவும் மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
வழக்கமான நாட்களை விட கோடை காலங்களில் அதிக அளவு மின்சாரம் தேவைப்படும்.
அதனால் மின் பற்றாக்குறையும், குறைந்த மின் அழுத்த பிரச்சினையும் ஏற்படும்.
எனவே ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்கவும்,
விபத்து கள் ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு சென்னையிலுள்ள அனைத்து டிரான்ஸ்பார்மர்கள், துணை மின்
நிலையங்கள் மற்றும் தெருவோர மின் இணைப்புப் பெட்டிகள் ஆகியவற்றை பழுது
பார்த்து வைக்க மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து, மின் துறை அதிகாரிகள் கூறியதாவது: அதிக வெப்பத்தால்
டிரான்ஸ்பார்மர்களில் உள்ள எண்ணெய் வெளியே கசிந்து, வெடிக்கும் ஆபத்து
உள்ளது. இதைத் தடுக்க முன்னெச் சரிக்கையாக டிரான்ஸ்பார்மர்கள் பழுது
பார்க்கப்படுகின்றன. இதே போல் துணை மின் நிலையங் களில் வலுவிழந்த கேபிள்கள்
மாற்றப்படுகின்றன. உதிரிப் பாகங் கள் தேவையான அளவுக்கு தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மின்தடை நீக்கும் மையத்தில் 24 மணி நேரமும் புகாரை பெற்று உடனடியாக
பழுது நீக்கும் வகையில் வாகன வசதி செய்யவும், தொழில்நுட்ப பணியாளர்கள்
பணியில் இருக்கச் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.