வெப்ப சலனத்தால் மழை

வெப்பச்சலனம் காரணமாக, நாமக்கல், கன்னியாகுமரியில் மழை பெய்து வருகிறது.
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்டு
வரும் மாற்றங்கள் காரணமாக, தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் உள்பகுதிகளில், சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம், நாமக்கல், கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், மிதமான மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, நாமக்கல்லில் 3, அதே மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வெப்பச்சலனத்தின் காரணமாக பெய்து வரும் இம்மழை, இன்னும் இரு தினங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பம் அதிகரிப்பு
சென்னையை பொறுத்தவரை, வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. இருப்பினும், கடலோர பகுதிகளை தவிர, மற்ற இடங்களில், அனல் காற்று அதிகளவில் வீசி
வருகிறது. மற்ற இடங்களில், அதிகபட்சமாக, திருப்பத்துார் நேற்று முன்தினம், 41 டிகிரி
செல்சியஸ் பதிவாகியது. நேற்று காலை நிலவரப்படி, வேலுார், திருச்சி, திருத்தணி, தர்மபுரி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில், அதிகபட்சமாக, 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகிஉள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...