நாகப்பட்டனம் அடுத்துள்ளது நம்பியார்நகர், இது ஒரு மீனவர் கிராமம்.
இங்குள்ள மீனவர்கள் பிடிக்கும் மீன்களை,
அருகில் உள்ள நாகப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்தி்ல் உள்ள சந்தையில் விற்பனை செய்து வந்தனர். இதற்கு, அக்கரைபேட்டை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 5 நாட்களாக நம்பியார்நகர் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இன்று, மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அதிகாரிகள் ஒருதலைபட்சமாக பேசுவதாக கூறி, நம்பியார்நகர் மக்கள் சாலை மறியல் செய்தனர். பின், கிராமத்தினர் அனைவரும் கிராமத்தில் தங்கி, உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர். மேலும், தாங்கள் தேர்தலை புறக்கணிப்பதாகவும், எந்த ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் தங்கள் ஊருக்குள் ஓட்டு கேட்டு வரக்கூடாது என்றும் கூறி உள்ளனர்.