தேர்தல் பயிற்சிக்கு அதிக அளவில் ஆசிரியர்கள் செல்வதால்
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு
நேற்று நடைபெற இருந்த அறிவியல் தேர்வு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி முறையில் மூன்றாம் பருவ தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் 24ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கான பணிகளும் மாவட்டத்தில் மும்முரமாக நடந்து வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு பணியாளர்களுக்கு தேர்தல் பயிற்சி முதல் கட்டமாக கடந்த 3ம் தேதி அனைத்து சட்டமன்ற தொகுதிவாரியாக நடந்தது.
இந்த பயிற்சியில் அனைவரும் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்பதால், அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இதனால், அன்று துவங்க இருந்த ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. 5ம் தேதிதான் தமிழ் தேர்வு நடந்தது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி நேற்று நடந்தது. இதனால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் தேர்வு நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பயிற்சி காரணமாக இதுவரை இரண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, தேர்தல் பணி காரணமாக இந்த பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், அது பற்றிய விவரங்களை வெளியிட மாவட்ட நிர்வாகமும், மாவட்ட கல்வித் துறையும் மறுத்து வருகின்றன.