தேசியக்கட்சி அங்கீகாரம் எப்படி கிடைக்கிறது?

ஒரு அரசியல் கட்சியானது, தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டால், நாடு முழுவதும் குறிப்பிட்ட ஒரே சின்னத்தில் போட்டியிடலாம்.
ஒரு கட்சி, தேசியக்கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கான விதிமுறைகளை, கீழ்க்கண்டவாறு, இந்தியத் தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது. கட்சி சின்னங்கள் குறித்த தேர்தல் ஆணைய விதிமுறை, 6 'பி' பிரிவில் கூறியிருப்பதாவது: நாட்டில் கடைசியாக நடந்த பொதுத்தேர்தல் அல்லது மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில், ஏதாவது நான்கு மாநிலங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில், பதிவான செல்லத்தக்க ஓட்டுகளில், ஆறு சதவீதத்துக்கு குறைவில்லாமல் ஒரு கட்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன், ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்தோ அல்லது மாநிலங்களில் இருந்தோ, பாராளுமன்றத்துக்கு குறைந்தபட்சம் நான்கு உறுப்பினர்களையும் தேர்வு செய்திருக்க வேண்டும்.அல்லது நாட்டில் கடைசியாக நடந்த பொதுத்தேர்தலில், பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள இடங்களில், இரண்டு சதவீத இடங்களை, ஒரு கட்சி கைப்பற்றியிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் இருந்து அந்தக்கட்சி சார்பில், பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.அல்லதுகுறைந்தபட்சம், நான்கு மாநிலங்களில் அந்த கட்சியானது, மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாநிலக்கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்குரிய விதிமுறை, 6 'ஏ' சொல்வது என்ன?
மாநில சட்டசபைக்கு கடைசியாக நடந்த தேர்தலில், குறைந்தபட்சம் ஆறு சதவீதம், செல்லத்தக்க ஓட்டுகளை பெற்றிருக்க வேண்டும். இத்துடன், குறைந்தபட்சம் இரு உறுப்பினர்களையாவது, சட்டசபைக்கு தேர்வு செய்திருக்க வேண்டும்.அல்லதுகடைசியாக நடந்த பாராளுமன்றத் தேர்தலில், குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில், குறைந்தபட்சம் ஆறு சதவீதம் செல்லத்தக்க ஓட்டுக்களை பெற்றிருத்தல் வேண்டும். இத்துடன், குறிப்பிட்ட அந்த மாநிலத்தில் இருந்து, பாராளுமன்றத்துக்கு குறைந்தபட்சம் ஒரு உறுப்பினரையாவது தேர்வு செய்திருக்க வேண்டும்.அல்லதுமாநில சட்டசபைக்கு கடைசியாக நடந்த தேர்தலில், சட்டசபையில் மொத்தமுள்ள இடங்களில் மூன்று சதவீதம் இடங்கள் அல்லது குறைந்தபட்சம் மூன்று இடங்கள் ஆகியவற்றில் எது அதிகமோ, அதை கைப்பற்றியிருக்க வேண்டும். அல்லது கடைசியாக நடந்த தேர்தலில், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொரு 25 பாராளுமன்ற இடங்களுக்கும் ஒரு இடத்தை கைப்பற்றியிருக்க வேண்டும்.


ஆம் ஆத்மிக்கு அங்கீகாரம் கிடைக்குமா?இந்த விதிமுறைகளின் அடிப்படையில், நடப்பு லோக்சபா தேர்தல் முடிவில், ஆம் ஆத்மி கட்சி, தேசிய கட்சியாகும் வாய்ப்பிருக்கிறது. அந்த கட்சிக்கு, டில்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், தேவையான சதவீதம் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக, கணிப்புகள் தெரிவிக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...