சிறு தானியங்களின் சாகுபடி பரப்பு குறைவால் அடுத்த தலைமுறையினர் ஊட்டச்சத்து குறைவு நோய்களால் தாக்கப்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிறுதானியங்கள் உணவு தேவையில் குறிப்பிட்ட அளவை ஈடு செய்கின்றன. பல்வகை நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தியை இந்த தானியங்கள் வழங்குகின்றன. நீரழிவு, இதய நோய்களை கட்டுப்படுத்துவதோடு சிலவகை நோய் கிருமிகள் உடலை தாக்காமல் தடுக்கும் பணியை இவை செய்கின்றன.
ஆனால், இதற்கான சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் குறைந்து வருவது விவசாயத்துக்கும், மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட சர்வே அடிப்படையில், உற்பத்தி திறன் வளர்ந்தாலும், உற்பத்தியை பெருக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய அளவில் சோளம் உற்பத்தி திறன் 47 சதவீதம் அதிகரித்தும், சாகுபடி பரப்பு 38 சதவீதம் மற்றும் உற்பத்தி எட்டு சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல், கம்பு சாகுபடி பரப்பு 63 மற்றும் உற்பத்தி எட்டு சதவீதம் குறைந்துள்ளது, கேழ்வரகு சாகுபடி பரப்பு 34 மற்றும் உற்பத்தி நான்கு சதவீதம் குறைந்துள்ளது. தினை சாகுபடி பரப்பு 50 மற்றும் உற்பத்தி 100 சதவீதமும் குறைந்துள்ளது. வரகு சாகுபடி பரப்பு 63 மற்றும் உற்பத்தி 49 சதவீதமும் குறைந்துள்ளது. சாமை சாகுபடி பரப்பு 58 மற்றும் உற்பத்தி 24 சதவீதம் குறைந்துள்ளது. பனி வரகு சாகுபடி 71 சதவீதம் குறைந்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது.
இந்த சாகுபடி பரப்பு குறைந்து வருவதால், ஊட்டச்சத்துமிக்க தானியங்கள் மிக குறைவாகவே உற்பத்தியாகிறது. அரிசியை மட்டும் உட்கொள்வதால் 20 சதவீதம் பேர் நீரழிவு நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாகவும், இந்தியாவில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் (சுமார் 20 கோடி பேர்) ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாகவும், தற்போது ஊட்டச்சத்து குறைவினால் 50 சதவீத குழந்தைகளின் வளர்ச்சி தடைபட்டுள்ளதாகவும், அரசு குறிப்பேட்டில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அடிப்படை காரணம், உற்பத்தி பற்றாக்குறையால் உணவில் சிறு தானியங்கள் சேர்க்கப்படுவதில்லை என்பது தான். இதுபோன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள், நோய்களை எதிர்காலத்தில் கட்டுப்படுத்த சிறு தானியங்களின் உற்பத்தியை பெருக்க வேண்டும்.
பொதுமக்கள் கூறியதாவது: தற்போது, மொத்த சாகுபடி பரப்பில் ஒரு சதவீதம் இடப்பரப்பில் மட்டுமே சிறு தானியங்கள் உற்பத்தியாகிறது. நமது நாடு பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினாலும், ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஈடுசெய்ய திணறி வருகிறது. ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் நோய்களை தடுக்க சிறு தானியங்கள் உற்பத்தியை கட்டாயம் பெருக்க வேண்டும். இதற்கு அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும். இந்த உற்பத்தியை பெருக்காவிட்டால் ஊட்டச்சத்து குறைவினால் ஏற்படும் நோய்கள் அடுத்த தலைமுறையை அதிகமாக தாக்கத் தொடங்கலாம். எனவே, சிறு தானிய உற்பத்தியில் அதிக கவனம் தேவை. இவ்வாறு, மக்கள் கூறினர்.