ஐ.ஐ.டி.,க்கள் உள்ளிட்ட, மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில்
சேர்வதற்கான, கூட்டு நுழைவுத்தேர்வு - மெயின்
(ஜே.இ.இ.,) நாடு முழுவதும் நடந்தது.
லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள, ஐ.ஐ.டி.,க்கள் - ஐ.ஐ.எம்.,கள் - ஐ.ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர, பொதுவான கூட்டு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வுகள், "மெயின்" மற்றும் "அட்வான்ஸ்டு" என, இரண்டு பிரிவாக நடத்தப்படும். முதலில் மெயின் தேர்வில் வெற்றி பெறுவோர், அடுத்த கட்டமாக, அட்வான்ஸ்டு தேர்வை எழுத வேண்டும்.
மெயின் தேர்வும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, எழுத்து மற்றும் ஆன்-லைன் தேர்வாக நடத்தப்படுகிறது. இதில், எழுத்து தேர்வானது நாடு முழுவதும் நடந்தது. ஆன்-லைன் தேர்வு, இம்மாதம் 9, 11, 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது.
எழுத்து தேர்வானது, நாடு முழுவதும், 150 நகர்களில் நடந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். அடுத்தகட்ட ஆன்-லைன் தேர்வு 281 நகரங்களில் அதற்கான தேர்வு மையங்களில் நடக்கிறது